ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரச துறையில் தொழில்- பிரதமர்

raaniaaail

பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ஒரு பட்டதாரி, பட்டம் பெற்று 6 மாத காலத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (12) அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்படி, அரச துறைகளில் நிலவும் சகல தொழில் இடைவெளிகளையும் இனங்கண்டு, உடன் அமுலுக்கு வரும் வகையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

12 comments

 1. Mhm Fsl

  குறிப்பிடுவது மட்டுமே எமது நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இவர்களுடைய கடமையாக என்றும் உள்ளது!
  ஆனால் அரச துறைகளில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் படித்து பட்டம் பெற்றவர்களை இனங்கண்டு கொள்வதை விட பணம் இருக்கும் சமூகத்தையே இனங்கண்டு பதவிகளை வழங்குகின்றனர்!
  இன்று எமது நாட்டில் உயர் அரச அதிகாரிகள் முதல் ஒரு சில சாதாரண அதிகாரிகளும் பட்டம் பெற்றார்களோ இல்லையோ ஆனால் பல இலட்சம் சம்பளம் பெறும் பதவிகளில் இருக்கின்றனர்!
  ஆனால் படித்து பட்டம் பெற்று எமது நாட்டினால் புறக்கணிக்கப்பட்ட பல இளைஞர்கள் தனது திறமையை வெளிநாடுகளில் சாதித்து வருகின்றனர்!
  இதற்கு காரணம் வேலைவாய்ப்பு துறைகளில் பணிபுரியும் அரச உயர் அதிகாரிகளும்,அதற்கு பொறுப்பான அமைச்சர்களுமே!

  எமது நாட்டின் பிரதமர் கூறுவது வரவேற்பு பெற்றது,
  ஆனால் அதனை சரிவர செய்யும் கட்டளையும் ஊழல் இல்லாமல்,மோசடிகள் செய்யாமல்,தரம் பார்க்காமல் , ஏனைய அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டளைப் படி நடக்காது நீதியான முறையில் செய்யவேண்டும் என்று அரச துறைகளுக்கு பரிந்துரை செய்யவேண்டும்!
  அதனை கண்காணிக்க ஒரு ஊழல் இல்லாத குழுவையும் ஜனாதிபதி ,பிரதமர் தலைமையில் இயங்கவேண்டும் என்று பணிவாய் வேண்டுகிறோம்.

 2. Mhm Fsl

 3. Sollvathu mattume seyalil kaanamudiyaathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>