மலையக தேசிய முன்னணி கூட்டு எதிர்க்கட்சியுடன் கைக்கோர்த்தது


mr-and-unf-003

நெலும் மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு சென்ற மலையக தேசிய முன்னணி பிரதிநிதிகள், கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைவதற்கான இணக்கத்தை தெரிவித்துள்ளனர்;.

இதன்படி, மலையக தேசிய முன்னணி கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளது.

இதற்கமைய, மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தலைமையிலான குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர்.

மலையக மக்களுக்கான சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை எனவும், மலையக மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதனால் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மலையக தேசிய முன்னணி தம்முடன் இணைந்தமையானது, நாட்டிற்கு சிறந்தமொரு சமிக்ஞை என அவர் குறிப்பிட்டுள்ளார்.(ச)

mr-and-unf-003mr-and-unf-002

9 comments

  1. Aslam Subair

    இவனோடு சேந்து நீங்களும் நரகத்துக்கு போங்கடா

  2. Ali Akbar

    இன்னும் இவன்ட பின்னால் போக ஆட்கள் இருக்கிறார்கள்தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>