பேராதனைப் பல்கலைக்கழக ‘அல் – இன்ஷிராஹ்’ சஞ்சிகை வெளியீடு


Uni of Peradeniya

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இதழான அல்-இன்ஷிராஹ் சஞ்சிகையின் 60 வது வெளியீட்டு விழா பெரும் பொருளாளர் கலாநிதி எம்.இஸட்.எம். நபீலின் வழிகாட்டலில் தலைவர் ஏ. ஜனூஸ், இதழாசிரியர் எம்.எம். சாஜிதின் முயற்சியில் அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக கலை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல். பீ. திஸாநாயக அவர்களும், கௌரவ அதிதியாக பேராசிரியர் எம்.ஏ.றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும், நூல் விமர்சகராக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை, இந்நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலாநிதி எஸ்.பாஸ்கரன், கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம், விரிவுரையாளர்கள் எஸ்.எம்.தமீம், ஜே.ஜெயதீஸ்வரன் மற்றும் உதவிவிரிவுரையாளர்கள்,பேராதனைப் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. (நு)
University of Peradeniya3University of Peradeniya

University of Peradeniya1

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>