பௌத்த கடும்போக்குவாதத்தில் இஸ்ரேலிய மதிநுட்பம்!


images_0e11551540ff15009bbbe3f42ba1fc72

லோக் சபைக்கான தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் நரேந்திரமோடி இந்திய சமூகத்தினரிடையே எதிர்கால இந்தியாவின் அடுத்த யுகபுருஷராக பிரபல்யம் பெற்றிருந்தார். தேர்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த பின்புதான் அவரது உருவம் சுதந்திர இந்தியாவில் இந்துத்துவ கடும்போக்குவாதியாக பிரகாசிக்கத் தொடங்கியது. 

ஐரோப்பியர்களது காலணித்துவத்துக்குட்பட்ட நாடுகளான அனைத்து நாடுகளிலும் கிறிஸ்தவ மயப்படுத்தலுக்கெதிரான மதவாத நடவடிக்கைகள் முன்னிலைப்பட்டதனால் வெளிநாட்டு நிர்வாகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. எனவேதான் காலணித்துவ சமூகத்தினரிடையே மதங்களின் அடிப்படையிலான முதலாவது சமூகப் பிணைப்பு தோற்றம் பெற்றது. 

இஸ்ரேல் – ஆசிய பிணைப்பு 

70 வது தசாப்தத்தின் ஆரம்பத்திலே முஸ்லிம் பயங்கரவாதத்துக்கெதிராக இஸ்ரேல் ஆசிய வலயத்தில் தனது அவதானத்தை செல்லுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதி ஜயவர்த்தனவின் காலப் பகுதியிலேயே இஸ்ரேல் முதற் தடவையாக இலங்கையோடு உத்தியோகபூர்வ அரச தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. ராஜபக்ஷ ஆட்சி ஆரம்பிக்கும் போதும் இஸ்ரேலுடனான கொடுக்கல், வாங்கல்கள் உறுதியான நிலையில் இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலஸ்தீன உறவை புறந்தள்ளிவிட்டு, அவர்களுடனான கொடுக்கல், வாங்கலை யுத்தத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கவை 2008 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றுக்கு அனுப்பி வைத்தார். 

இஸ்ரேலுடன் இருந்த தொடர்பின் அடிப்படையில் 2007 ம் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் யுத்த உற்பத்திகளை அதிகமாக கொள்வனவு செய்தது இந்தியாவாகும். அது 2007ம் ஆண்டில் 1.7 பில்லியன் டொடல்களாக இருந்தது. 

2008 நவம்பர் 26ம் திகதி மும்பை நகரில் ஷலக்ஷார் ஏ- தைபார்’ பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கழிவதற்குள் அதுவரை ஒரு வருடமாக காலம் பிற்படுத்தப்பட்டுவந்த, இந்தியாவின் ஏவுகணை பாதுகாப்புத் தொகுதியின் இரண்டாவது கட்டமான ஷபரக்2 ன் புனர்நிர்மாணத்துக்கென 1.5 பில்லியன் டொலர் பெறுமானங் கொண்ட ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் ஐயுஐ அமைப்போடு கைச்சாத்திடப்பட்டிதாக இஸ்ரேலின் ஜீலிஷ் பிரெஷ்’ டிசம்பர் 5 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு ஒரு மாதம் கழித்து இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட மிகவும் அமைதியானதும் பயங்கரமானதுமான புரிந்துணர்வு உடன்படிக்கையாக கருதப்படும் இஸ்ரேலிய சட்ட கூட்டம் ஒன்றுக்கான உடன்படிக்கை கைச்சாத்தானது. இது இரு நாடுகளினதும் உயர்மட்ட சட்ட வல்லுநர்கள், நீதிபதிகளைக் கொண்டதும் எதிர்கால சட்ட திட்டங்களை உருவாக்குவது பற்றி கலந்துரையாடுவதற்காகும். 

ஊடக ஆய்வினூடாக ஊடக அதிபதியினால் மறைக்கப்படுகின்ற தகவல்களை கலந்துரையாடலுக்குற்படுத்துவது தமது அதிகாரமென குறிப்பிடும் ஷடிலிபரேஷன்’ எனும் இன்டர்நெட் வலையமைப்பின் படி  இஸ்ரேலின் தொடர்புகள் பர்மாவிலும் காணப்படுவதாக குறிப்பிடுகின்றது. ரங்கூன்  மற்றும் பதேன் நகரங்களில் பொருளாதார வலிமையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் யூத குடும்பங்கள் நூறு வருடங்கள் பழமையான பரம்பரையினராகும். இவர்களுக்கும் பர்மாவின் இராணுவ ஆட்சிக்குமிடையிலான நெருக்கமான அரசியல் தொடர்பு நீண்டகாலமாக உறுதிப்படுத்தப்பட்டவையாகும். பர்மாவின் இராணுவ ஆட்சியின் போது அந்நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மையின சமூகங்களும் ஒடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் ரங்கூன், பதேன் பிரதேசங்களின் மேயர்களாக அந்த நகரங்களிலுள்ள யூத தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது அவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணத்திலாகும். 

யூத சமூகத்தவரன ரொக்ஸ்பீல்ட் வங்கி மற்றும் நிதி திட்டமிடலுக்கும் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கெதிராக நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மூலமாக பர்மாவில் மேற்கொண்டு வருவதாக லிபரேஷனின்’ எழுத்தாளர் குஷீப் அஹ்மத் குறிப்பிட்டிருந்தார். நோபல் சமாதான விருதுக்குரியவரான ஆங் சான் சூகியின் ஜனநாயக அரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுவது ரொக்ஷ்பீல்டின் தலையீட்டின் அடிப்படையிலாகும். 

முத்துக் கொடியென வர்ணிக்கப்படும் தெற்கு சீனாவின் ஹைனான் தீவு, பர்மாவின் சிட்வே, பரசெல்தீவுக் கூட்டத்தின் வூட்தீவு, வங்காள தேசத்தின் சிட்டகொஸ், இலங்கையின் அம்பாந்தோட்டை, மாலைதீவின் மாஓஇன்தீவு மற்றும் பாகிஸ்தானின் கிழக்குக் கரையோர கவாதார் துறைமுகம் உட்பட அரபிக்கடல் வரையில் நீண்டு செல்கின்ற கடல்மார்க்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2020 ஆம் ஆண்டாகும் போது சீனாவுக்கு அவசியமான எரி சக்தியில் 60 வீதமானவற்றை மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. சீனாவின் பொருளாதார விருத்திக்கு இக்கடல் மார்க்கம் முக்கிய காரணியாக விளங்குகின்றது. இதனை அமெரிக்கா தொடர்ந்தும் கையாளுவதற்கு இவ்வலயத்திற்குட்பட்ட நாடுகளில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டிய இயலுமை அமெரிக்காவிடம் இருக்க வேண்டும். இந்த கொந்தராத்தை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. 

இந்துத்துவ – பௌத்த வாதம் 

மோடி அரசியலில் கால்பதிப்பது காங்கிரஸ் எதிரியாகவல்ல இவர் இளம் பராயத்தில் திருமணத்தைக் கைவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறி அஹமதாபாத்திலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு முன்னால் தேனீர் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளை, இந்துத்துவ மதவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டவராவார். இவர் குஜராத் மாநில முதலமைச்சராக நியமனம் பெறுவது பி.ஜே.பியினரின் தீர்மானத்தினால் அல்ல, ஆர். எஸ்.எஸ்ஸின் சிபாரிசின் பேரலாகும். எனவே மோடி பிரதமர் அபேட்சகராக நியமனம் பெற்றமையை பி.ஜே.பியின் முக்கிய தலைவர்களால் தடுக்க முடியாமல் போனது. இந்தியாவின் முஸ்லிம் விரோத கடும்போக்கு வாதத்தின் உண்மையான தேசிய தலைமையான ஆர்.எஸ்.எஸ். அந்நாட்டு அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது நடவடிக்கையாவது இவர் உருவாக்கி, வளர்த்த முஸ்லிம்களின் எதிரியான நரேந்திர மோடியை பிரதமர் பதிவிக்கான அபேட்சகராக தீர்மானித்ததாகும். 

பி.ஜே. பியை முஸ்லிம் விரோத இந்து கடும்போக்கு கட்சியாக தோற்றுவிக்க ஆர். எஸ்.எஸ். தலைமை தீர்மானித்த போது, இஸ்ரேல் அதற்கு நிதியுதவி வழங்கியதாக விஜே பிரசாத் அவரது நமஸ்தேஷரன் எனும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்துத்துவ அமைப்புக்களுக்கு அண்மையில் கிடைத்த நிதியுதவி சம்பந்தமான தகவல்கள் புதுடில்லியின் இரு வாரங்களுக்கொருமுறை வெளியிடப்படுகின்ற மிலிகசெட்’டின் 2009 டிசம்பர் முதலாவது இதழில் வெளியாகியிருந்தது. இந்திய தகவல் அமைச்சின் 2008 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டிருந்த தகவலின்படி இந்துத்துவ அமைப்புகளுக்கு 7877 கோடி ரூபா கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்த நிதியுதவி வெளிநாட்டவர்களிடமிருந்து கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந் நிதியுதவி இஸ்ரேலிடமிருந்து நேரடியாக வந்து சேராமல் ஐரோப்பாவிலுள்ள வேறு தரகர் அமைப்புக்களுடாக அனுப்பப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதேபோன்று தான் பர்மாவில் மிருகத்தனமாக, முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள, இளம் தேரர் அஸ்வின் லிராத்துவின் வித்தியாசமான பெயரையுடைய ஷ969′ அமைப்புக்கும் மொசாட் நிதியுதவி வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்க தலையீட்டினால் பர்மாவில் தோற்றுவிக்கப்பட்ட இராணுவ ஆட்சியின் இணக்கப்பாட்டு ஜனநாயக மயப்படுத்தலுக்கு வரைவிலக்கணம் வழங்குவதில் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டது. அல் – ஜஸீரா தொலைக்காட்சிக்கு 2013 டிசம்பரில் பிரன்சிஸ் வேர்ட் பர்மா தொடர்பாக மேற்கொண்ட ஆய்வொன்றின்படி ஷஉண்மையிலே யார் இதன் பின்னணியில் இருப்பதென்பது தெளிவாகவிட்டாலும் பிரபல்யமிக்க ஷ969′ அமைப்பின் ஆரம்பம் இராணுவ ஐPண்டா முதல் மதவிவகார அமைச்சர் வரை நீண்டு செல்கிறது. அதேபோன்று ஷ969’ன் கொள்கை தற்போதைய அரசாங்கத்திலும் உயிர் பெற்றுச் செயற்படுகின்றது. இந்த இராணுவ ஜுண்டாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான மிக நெருங்கிய தொடர்பு தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

தற்போதைய பர்மா அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இஸ்ரேல் மிக நெருக்கமாக செயல்படுகின்றதென்பது உண்மை. பர்மா ஜனநாயக வாதத்தின் ஆத்மீக தலைவியும் சமாதான விருதுக்குரியவருமான ஆன் சாங் சூகி  ஷ969 பற்றியும் சிராத்துவின் முஸ்லிம் விரோத பௌத்த கடும்போக்கு வாதம் பற்றியும் எதுவும் கூறாதிருப்பதும் மற்றொரு உண்மையாகும். 

மாற்று மத, மற்றும் முஸ்லிம் விரோத பயங்கரவாதத்துக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் எந்தவிதமான தடைகளும் இல்லையென்பது வாதத்திற்கப்பாற்பட்டது. அந்த பின்புலத்திலிருந்து நோக்கம் போது முஸ்லிம் விரோத பௌத்த கடும் போக்குவாதம் சம்பந்தமாக இந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்பே முதலாவது யூத கேந்திர நிலையம் இங்கு உருவாக்கப்பட்டது. ஷபார்ட் இல்லம் என இக் கேந்திர நிலையம் அழைக்கப்படுகின்றது. 20 நாடுகளில் நிறுவப்பட்டுள்ள இக்கேந்திர நிலையம் அடிப்படைவாத அமைப்பொன்றினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஹிக்கடுவையிலுள்ள ரிசோட் ஹோட்டலில் இதனது முதலாவது செயலமர்வு இடம்பெற்றுள்ளது. தற்போது கொள்ளுப்பிட்டியிலுள்ள கீரின் பாத்தில் நிலையான இடத்தில் ஷவர்ட் இல்லம் செயற்பட்டு வருகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருக்கும் அனைத்து மத நடவடிக்கைகளையும் செயற்படுத்தும் நிலையமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.  

இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையே வர்த்தக ரீதியாக மட்டுமன்றி பாதுகாப்பு சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்களும் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன. இலங்கையின் முதலாவது அரச தலைவராக கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த நாட்டின் ஜனாதிபதி ஷிமொன் பெரசுடனும், பிரதமர் நெத்தன்யாஹுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இவரது விஜயம் பற்றி ஷஜெருசலம் போஸ்ட்’ செய்திப்பத்திரிகை ஜனவரி 9 ம் திகதி அதனது செய்திக் குறிப்பொன்றில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்த கடல் எல்லையை இல்லாமல் செய்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தது. இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத்துறை சம்பந்தமான விடயங்களும் சிறந்த முறையில் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இஸ்ரேல் கடந்த வருடம் பயிற்றப்படாத 1500 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தது. தொழிலாளர்களாக அதிகமானோர் அங்கு சென்றனர். தற்போதும் மருத்துவத்துறை சார்ந்த வெற்றிடங்களுக்கு 530 பெண்களும் 580 ஆண்களும் அனுமதிக்கப்படவுள்ளார்கள். இது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நலன்புரி சம்பந்தமான முகாமையாளர் ஒருவரைச் டெல் அலீலில் உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளது. 

இஸ்ரேலின் கலீலி நகரத்தில் அமைந்துள்ள கரலிலகொட்டுவ தாம்மதிலக்க தேரர் வாழ்ந்து வருகின்ற விகாரை இஸ்ரேலில் காணப்படும் ஒரே ஒரு பௌத்த வழிபாட்டுத்தலமாகும். பொதுபலசேனாவை உருவாக்கிய தலைவர்கள் 2011 ஒக்டோபர் 20 ஆம் 26 ஆம் திகதிகளுக்கிடையே நோர்வேக்கான விஜயம் ஒன்றினை ழெசநக எனும் நோர்வே நிறுவனத்தின் அனுசரனையோடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருப்பது நீண்டகாலமாக இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான நோர்வே தேசிய ஆனா பியடொப் மற்றும் அப்போதைய நோர்வே தூதுவராக செயல்பட்ட கிரேடெல் ஷென் எனும் பெண்மணியினாலாகும்.

பொதுபலசேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயல்படுகின்ற திலந்த  விதானகேயின் வேண்டுதலின் பேரில் பொதுபல சேனா எனும் பெயரில் நிறுவனமயப்பத்தப்பட்டது. கலகொட அத்தே ஞானசார வித்தாரன் தெனியே நந்த அனுத்பெப ஆனந்த, தபேன சுமன டுஸ்ச, வெலிமட சாந்த ஆகிய ஐந்து தேரர்களோடு இவரும் பூஜித விஜேசிங்ஹ்ன், மாக் அந்தனி பெரேரா ஆகியோர் 2012 மே மாதம் 07 ஆம் திகதி நோர்வேக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னராகும்.

அங்கு இவர்கள்  அமைச்சர் சோல்ஹெய்ம் மற்றும் பாராளுமன்ற அமைச்சர்களை சந்தித்ததை திலந்தையும் ஏற்றுக்கொண்டார்.  பொதுபல சேனாவின் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டிருப்பது ஹவ்லொக் வீதியிலுள்ள ( தற்போது சம்புத்தவ மாவத்தை ) சம்புத்தத்வ ஜயந்தி மண்டபமென அழைக்கப்படுகின்ற பல மாடிகளைக் கெண்ட பாரிய கட்டிடத் தொகுதியாகும்.

இது ததிரம விமல ஜோதி தேரரது பௌத்த கலாச்சார மத்திய நிலையத்திற்கு உரித்தானதாகும். இக்காணி மக்கள் வங்கியால் ஏலத்தில் விடுவதற்காக இருந்த காணியாகும்.இவ்வாறானதொரு நிலையில் இங்கு சம்புத்த ஜயந்தி மண்டபம் எவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட தென்பதும் அதற்கான கோடிக்கணக்கான ரூபாவை முதலீடு செய்தவர் யாரென்பதும் மர்மமாகவுள்ளது.

பொதுபல சேனாவின் பயிற்சி முகாமாக காலி பிளானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘ மெத்செவன’ வை நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 2013 மார்ச் மாதம் 9 ஆம் திகதி திறந்து வைத்தார். இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சின் வெப்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ மெத்செவன’ நிர்மாணிக்கப்பட்டு சங்கைக்குரிய தேரர்களுக்கு பூஜிக்கப்பட்டிருப்பது ஜேர்மனியைச்சேர்ந்த மைக்கல் ஜே.ஏ.கிரைட் மெயர் என்பவரினாலாகும்.’

மைக்கல் கிரைட் மெயர் கொஸ்லந்தையில் நிறுவப்பட்டுள்ள அனாதைச் சிறுவர்களுக்கான ‘லிட்டில் ஸ்மைல் அசோசியேசன்’ என அழைக்கப்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனமொன்றினை வழிநடத்திச் செல்பவராவார். இவர் ஜேர்மனியிலுள்ள யூத வழித் தேன்றலான ஒருவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் லித்தாரன்தெனிய நந்தவுடன் திலந்தவிதானகே உட்பட்ட பிரநிதிகள் பர்மாவிற்கு விஜயம் செய்து அங்கு அஸ்வின விராத்து தேரரை சந்தித்துள்ளனர்.

அதே போல் விராத்து தேரருக்கும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இவ்வாறான வெளிநாட்டு பிரயாணங்களுக்கான பணம் எங்கிருந்து கிடைக்கின்றதென்பது மர்மமாகவே உள்ளது.

இஸ்ரேலின்  நிதியுதவிகள்  நோர்வே ஊடாக கிடைக்கப் பெறுவதென்பது தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் அதே வேளை இவை பல்வேறு நாடுகளில் முஸ்லிம் விரோத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்ற தலைப்பாகவுள்ளது. இந் நிலையில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை  சண்டே லீடர் பத்திரிகைக்கு பொதுபல சேனா பற்றி கருத்து தெரிவித்த திலந்த விதானகேயிடம் இவர்களுக்கான நிதியுதவி எங்கிருந்து கிடைக்கின்றதென்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ‘எமக்கு நிதியுதவி வழங்குவது இஸ்ரேல் என சிலர் கூறுகின்றனர். 

இவை அனைத்தும் பொய் பிரச்சினைகள், சிக்கல்கள் இருப்பின் எந்தவொரு நபருக்கும் வந்து பார்க்க முடியும் எமது செயற்பாடுகள் திறந்த நிலையில் உள்ளன  எனக் குறிப்பிட்டார். அவ்வாறு சென்று பரீட்சிப்பதற்கேற்ற, இவரது நடத்தை, ஒழுக்கம் பற்றி நம்பிக்கை கொள்ளக் கூடிய சுயாதீன நபரொருவரை அடையாளம் காண்பதுதான் பெரும் பிரச்சினையாகவுள்ளது. (மு)

நன்றி – ராவய

ஆக்கம் – குசல் பெரேரா 

தமிழ் மூலம் – ஸிராஜ் எம்.ஸாஜஹான்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>