சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை 13ஆம் திகதி ஆரம்பம்


DSC_4271

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 13ஆம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக நாளை (12) சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை வந்தடையும்.

இம்முறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணிக்கவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் ஊர்வலம் பயணித்து ஹட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் பயணிக்கவுள்ளது.

மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி – பலாபத்தல வீதி ஊடாக பயணிக்கவுள்ளது. தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் பெல்மடுல்ல – ஓப்பநாயக்க, பலங்கொட, பின்னவல, பொகவந்தலாவ ஊடாக சிவனொளிபாதமலையை அடையவுள்ளது.

அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர் 13ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2016 – 2017ம் வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிவனொலிபாத மலை பருவகால யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், யாத்திரிகர்களுக்கு மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரிகர்களுக்காக விசேட போக்குவரத்துச்சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், நல்லதண்ணி பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

DSC_4424

DSC_3828__1_ DSC_4271
DSC_0316

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>