ஏ.எம்.அஸ்கரின் இந்த காலைப்பொழுது கவிதை நூல் நாளை வெளியீடு


15578890_1513353028679635_2894995319910096003_n

வானொலி அறிவிப்பாளர் ஏ.எம். அஸ்கர் எழுதிய இந்த காலைப்பொழுது கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை (சனிக்கிழமை) மாலை 04.30க்கு கொழும்பு 10 D.R விஜவ்வர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணியும் கவிஞருமான இராஜ குலேந்திரா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கௌரவ அதிதியாக அமைச்சர் மனோகணேசனும் உலக அறிவிப்பாளர் பி.எச் அப்துல் ஹமீதும் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறித்த நூல் தொடர்பான கண்ணோட்டத்தினை பாடலாசிரியர் யுகபாரதி, கவிஞர் அனார், திரைப்பட இயக்குனர் மீரா கதிரவன், உட்பட எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான ஹஸீனும் வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0772663356 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் நூலாசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார்.(ச)

15578890_1513353028679635_2894995319910096003_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>