கலைவடித்த கலைஞன்


15621810_357084131324535_1219075311915500048_n

“பார்கின்ற பார்வைகள்
பாரினில் பலவிதமே
பார்வைகளின் சிந்தனை
மானிடனில் தனி விதமே

கண்ணெதிரே தெரிவது
கடல் உயிருமல்லவே
கட்டியணைத்து முத்தமிட
கை குழந்தையுமல்லவே

இதமாக தான் உறங்கினும்
இனம்கூட வைத்திடுமே
இதயத்தில் இசைமீட்டும்
சுகமொன்றை தந்திடுமே

உருவாகும் கருபோல
உருவத்தில் இருந்ததிடுமே
உயிர் மூச்சு இலையென்றால்
உலகில் நம்பிடுவார் எவராவரோ

கண்ணுக்கு விருந்தாகி
கண்காட்சி பொருளாகிடுமே
கலையென்றால் இயற்கைகூட
தலையாட்டி மகிழ்ந்திடுமே -இந்த
கலைவடித்த கலைஞனுக்கு
கரகோஷம் கேட்கட்டுமே!!!

-ஜெயவவா அன்பு

15621810_357084131324535_1219075311915500048_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>