இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு இல்லை, இனவாதம் தூண்டப்படுகின்றது-சந்திரிக்கா


Chandrika CBK

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனுமதி கிடைக்கப் பெறவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இன்று (10) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இது போன்றதொரு யோசனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு முன்வைக்கப்பட வில்லையெனவும் அவர் கூறினார்.

கண்ணுக்குத் தெரிவதற்கு யுத்தமொன்று காணப்படாத போதிலும், பிரதான இரு இனங்களிடையேயும் புரிந்துணர்வுக்கான அடையாளங்கள் காண முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் நோக்கங்களுக்காக சில தேரர்களே இன்று இனவாதத்தை தூண்டி வருகின்றமை கவலையளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்தார். (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>