சவூதியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்த ஜெக்லினுக்கு சம்பள நிலுவை வழங்கி வைப்பு


IMG_8491 copy

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சம்பளம் இல்லாமல் பணியாற்றிய கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை ஜெக்லின் எனும் பணிப்பெண்ணின் சம்பள நிலுவைத் தொகை நேற்று (10) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

30 வயது நிரம்பிய ஒரு குழந்தையின் தாயான ஜெக்லின் கடந்த 2013 ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு பயணமானார். அங்கு அவர் பணியாற்றிய வீட்டு உரிமையாளரினால் முதல் வருடத்துக்கான சம்பளம் வழங்கப்பட்டது. என்றாலும் இரண்டாம் வருடம் முதல் அவருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை, இது தொடர்பில் ஜெக்லின் ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஊடக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய தூதரகத்தினால் அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்து, ஜெக்லினின் சம்பள நிலுவைத் பணமான 17000 சவூதி ரியால்களை ( 677,167.80 இலங்கை ரூபா) பணத்தினை அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் ஊடாக நேற்று ஜெக்லீனிடம் ஒப்படைக்கப்பட்டது. (ஸ)

IMG_8491 copy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>