லிந்துலையில் வர்த்தக நிலையமொன்றில் தீ (Photos)


20170111_132550_resized

லிந்துலை பிரதான நகரத்தில் உள்ள தேயிலை விற்பனை கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் கடையில் இருந்த தேயிலை தூள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பகல் 12.30 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடையின் உரிமையாளர் கடவுள் படத்துக்கு முன்னால் விளக்கினை எரிய வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

விளக்கினால் தீ பரவியிருக்க கூடும் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயினை ஏனைய கடைகளுக்கு பரவவிடாமல் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (கி|நு)

20170111_132550_resized 20170111_131943_resized20170111_132528_resized 20170111_132036_resized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>