27ஆம் திகதி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த மஹிந்த முஸ்தீபு


f194aebe76f3a1e1f0ac6af4f421c4fd_XL

எதிர்வரும் 27ஆம் திகதி அரசியலில் மாற்றம் ஒன்று ஏற்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அதற்கமைய “மாற்றத்தின் ஆரம்பம்” எனும் தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 27ஆம் திகதி பி.ப 2 மணிக்கு நுகேகொடயில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

நாட்டைப் பிரிக்கும் அரசியல் யாப்பு, வாழ்க்கை செலவு, பிரதேச சபை தேர்தலை பிற்போடுவது, அரச நிறுவனங்கள் விற்பனை, திருட்டு மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பேரணியை நடத்துவதாக கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. (ஸ)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>