மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் – அஜித் பி. பெரேரா


Ajith P. Perera

கடுமையான வரட்சி நிலவிய போதிலும் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

மின்சாரப்பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், “வரட்சியின் காரணமாக நீர் மூலமான மின்சக்தி உற்பத்தி 35 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. அணல் மின்நிலையம் மூலமான மின்னுற்பத்தியை கொண்டு வரட்சியினால் ஏற்படக்கூடிய மின்சார பிரச்சினையை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகிவருகின்றோம்” என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மின்துண்டிப்பு இடம்பெறுமாயின் அதுதொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால் தற்பொழுது அவ்வாறான ஒரு தேவை இல்லை என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>