அதிகாரம் உங்கள் கைகளில். தகவலுக்கான உரிமையை பயன்படுத்துவோம்


law RTI

தகவலுக்கான உரிமை என்றால் என்ன ?

தகவலுக்கான உரிமை எனப்படுவது பொது அதிகாரசபைகளில் உள்ள பொது தகவல்களை கோருகின்ற அடிப்படை உரிமையாகும்.

பகிரங்க சபைகளானது நாட்டின் குடிமக்களின் நம்பிக்கைக்குப் பொறுப்பான பல தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு குடிமகனாக அவ்வாறான தகவல்களை அறிவது நம் ஓவொருவரதும் அடிப்படை உரிமையாகும்.

ஜூலை 4 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 2016 ம் ஆண்டின் 12ம் இலக்க, தகவலுக்காக உரிமைச் சட்டமானது, தகவல் அறியும் செயன்முறையை விளம்பி நிற்கின்றது. இது குறித்த பகிரங்க சபையில் சாதாரணமாக ஒரு விண்ணப்பத்தை மேற்கொளும் செயன்முறையாகும்.

சாதாரணமான செயன்முறையின் கீழ் விண்ணப்பித்ததில் இருந்து அதிக பட்சம் 28 நாட்களுள் குறித்த தகவலை பெற்றுக்கொள்ள முடியும்.

(தகவலானது எண்ணிக்கையில் அதிகமாக அல்லது தொலைவிலிருந்து கொண்டுவரவேண்டிய தேவை இருப்பின் மேலதிக கால அவகாசமானது 21 நாட்களாக நீடிக்கப்படலாம்.)

 

தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழான தகவல் அறியும் செயன்முறை தொடர்பான விவரண வரைபடம்

Process_Tamil

தகவல் எனப்படுவது யாது?

‘தகவல்” என்பது பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்அஞ்சல்கள், அபிப்பிராயங்கள், மதியுரைகள், பத்திரிகை வெளியீடுகள்; சுற்றுநிரூபங்கள், கட்டளைகள், சம்பவத்திரட்டுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், பதத்திரிகைகள், மாதிரிகள், உருப்படிவம், கடிதத் தொடர்பு, குறிப்பறிக்கை, விரைவுச்சட்டவாக்கம், புத்தகம், திட்டவரைபு, வரைவு, வரைபடம், பட அல்லது வரைபட வேலை, புகைப்படம், திரைப்படம், குறும்படம், ஒலிப்பதிவு, ஒளிநாடா, இயந்திரம் மூலம் வாசிக்கக்கூடிய பதிவுகள், கணணிப்பதிவுகள் மற்றும் வேறு ஆவண பொருள், உள்ளடங்கலாக அதனது பௌதீக படிவம் அல்லது பண்பு பொருள்படுத்தாமல் ஏதேனும் படிவத்திலான ஏதேனும் பொருள் மற்றும் அதன் ஏதேனும் பிரதி என்பவற்றை உள்ளடக்குகின்றது.

எவ்வாறான தகவல்களை என்னால் பெற முடியும்?
குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளும் விசேட நன்மைகளுக்கான காரணங்கள், தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான அடிப்படைகள், நேர்முகப் பரீட்சைகளின் புள்ளிகள், பாடசாலை அனுமதி மறுப்புக்கான காரணங்கள், அலுவலகங்களின் உள்ளக செயற்பாடுகள் போன்ற ஏனைய விடயங்களையும் அறிந்துகொள்ளளாம். (ஸ)

தகவல்களைப் பெறுவதற்கான விண்ணப்பம் – தமிழ் 

Graphicloads-Filetype-Pdf

Source : http://www.rtiwatch.lk/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>