புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 PLUS அறிமுகம் (Video)


03

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகிறது.

எனினும் ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புக்களில் சில சிறப்பம்சங்களை நீண்ட காலத்திற்கு மாற்றாமல் வைத்திருக்கும்.அதில் அவர்களுடைய வர்ணங்களும் உள்ளடங்கும்.

இதற்கு காரணம் குறித்த கைப்பேசிகளுக்கான வரவேற்பினை மீண்டும் தூண்டுவதாகும்.

இதுவரை காலமும் Jet Black, Black, Silver, Gold, Rose Gold ஆகிய வர்ணங்களிலேயே அறிமுகமாகி வந்தது.

இந்நிலையில் தற்போது கண்கவர் சிவப்பு நிறத்திலான iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் பிரபல தொலைபேசி வலையமைப்பு நிறுவனமான Vodafone ஊடாக நேற்று 24ம் திகதி இந்த சிவப்பு நிற கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. (ஸ)

0103 02 01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>