இலங்கையின் கோஸ்வே பெயிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய இந்தியாவின் ஏசியன் பெயிண்ட்


இந்தியாவின் ஏசியன் பெயிண்ட் இலங்கையின் கோஸ்வே பெயிண்ட் நிறுவனத்தை 9 பில்லியன் ரூபாய் பெறுமதிக்கு கொள்வனவு செய்துள்ளது.

கோஸ்வே பெயிண்ட் நிறுவனத்தின் 100%யும் 3.87 பில்லியன் இந்திய ரூபாய்க்கு ஏசியன் பெயிண்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக பங்குப் பரிவர்த்தனை அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சந்தையில் காணப்படும் ஏசியன் பெயிண்ட் (லங்கா) நிறுவனத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த கையகப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.

கோஸ்வே பெயிண்ட் லங்கா தனியார் நிறுவனமானது இலங்கையில் கடந்த 2 தசாப்தங்களாக அலங்கார வர்ணப்பூச்சு வகைகளை வழங்கிவரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. (நு)

asianpaints

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>