71.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி பிங்க் ஸ்டார் வைரம் புதிய உலக சாதனை


C8kTLYUWsAEQmje

ஹொங்கோங் இல் ‘சோத்பை’ நிறுவனம் சார்பில் நடந்த ஏலத்தில் ‘பிங்க் ஸ்டார் வைரம்’ 71.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

59.60 கரட் கொண்ட இந்த வைரம் உலகிலேயே மிகப்பெரியது என அமெரிக்காவின் ஜெம்மாலஜிகல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முட்டை வடிவிலான இந்த வைரம் 11.92 கிராம் எடையும் கொண்டது. இது கடந்த 1999-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள சுரங்கத்தில் டி பீர்ஸ் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு முன்பு கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் கிறிஸ்டி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில், ஒப்பன்ஹீமர் புளு வைரம் (14.62 காரட்) 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. தற்பொழுது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)
C8kTLYUWsAEQmje

C8kTLn6XcAAOG0i

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>