சவூதி அரேபிய ஊடகவியாளர்கள் – அமைச்சர் ஹலீம் சந்திப்பு


8c25b450-481c-42cf-b78a-5e2ac6c2794d

சவூதி அரேபியாவை சேர்ந்த ஊடகவியாளர்கள் குழு ஒன்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம் எச் அப்துல் ஹலீம் அவர்களை அண்மையில் தபால் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

சவுதி அரேபிய பர்க் நியூஸ் தலைமை பதிப்பாசிரியர் ஷேக் அஹ்மத் கஸ்ஸான் அஸ்ஸிரி தலைமையில் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகத்தினர் என்ற முறையில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அவைகளுக்கு முகம்கொடுக்கும் செயல்பாடுகள் சம்பந்தமாகவும் அமைச்சரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

அமைச்சர் இலங்கை அரசுக்கு சவுதி அரேபிய அரசு அளித்து வரும் பல வகையான அபிவிருத்திகளுக்கு ஆதரவு அளித்து வருவதையிட்டு நன்றி தெரிவிப்பதோடு பலகாலத்திற்கு பிறகு முஸ்லிம்களுக்கு தற்போது கிடைத்திருக்கும் தனியான அமைச்சு ஊடாக சமூகம் அடைந்துவரும் பலன்கள் பற்றியும் தெளிவு படுத்தினார்.

கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ஹஜ் சம்பந்தமாகவும் பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் பள்ளிவாசல் பரிபாலனம் சம்பந்தமாகவும், மதரசாக்களை ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கம் சம்பந்தமாகவும் முஸ்லிம் கலாசார அமைச்சும் திணைக்களமும் எடுத்து வரும் முன்னெடுப்புகள் சம்பந்தமாக திருப்தியையும் பாராட்டையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (நு)

-ரஸி ஹாஷிம்-
8c25b450-481c-42cf-b78a-5e2ac6c2794d86dff8fa-1fc6-4e55-aabf-b686aca822e636b98075-0831-492b-aff4-df4d7bdad0ba

 

2 comments

  1. Harees Mohamed

    இஸ்லாமி அரிவு 0%கூட இல்ல

  2. Harees Mohamed

    இஸ்லாமி அரிவு 0%கூட இல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>