சுதந்திரமும் கௌரவமும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள பலஸ்தீன சிறைக் கைதிகள்


Palestine_flag_barbed_wire
என்.எம். அமீன் சிரேஷ்ட ஊடகவியலாளர்

என்.எம். அமீன் சிரேஷ்ட ஊடகவியலாளர்

கடந்த பல வருடங்களாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சிறையில் வைத்திருக்கின்றது. சிலர் பல தசாப்தங்களாகவும் மற்றும் சிலர் சில மாதங்களாகவும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 1967ஆம் ஆண்டு முதல் மேற்குக் கரை, கிழக்கு ஜெருஸலம், காஸா பள்ளத்தாக்கு ஆகிய பிரதேங்களைச் சேர்ந்த 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக பலஸ்தீன் தெரிவிக்கின்றது.

இந்த எண்ணிக்கையானது மொத்த பலஸ்தீன சனத் தொகையில் 20 சதவீதமாகும். பலஸ்தீன ஆண்களில் 40 சதவீதமானோர் சிறைக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பலஸ்தீனக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் ஒருவராவது இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். உலகிலே அரசியல் காரணங்களுக்காக ஆகக் கூடுதலானோர் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாடாக இஸ்ரேல் காணப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 1597 பலஸ்தீனர்கள் கைது செயப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 46 பெண்களும் 18 வயதிற்குக் குறைந்த 311 சிறுவர்களும் அடங்குவர். இப்போது இஸ்ரேலின் சிறைகளில் 6500 பலஸ்தீனர்கள் இருக்கிறார்கள்.

பலஸ்தீனர்கள் தமது தாயகத்தை மீட்பதற்காக நடத்திவரும் போராட்டத்தை அடக்குவதற்காகவே இஸ்ரேல் பாரியளவில் கைதுகள் மேற்கொண்டு வருகின்றது. பலஸ்தீன மக்களது சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்காக இராணுவ பிரசன்னத்துடன் அடக்கு முறையை மேற்கொண்டு வருகின்றனர்.

e96b607d-1dc5-4d5b-968e-396bd92d24f6இஸ்ரேல் நீதிமன்றம் இந்தக் கைதுகளை நியாயப்படுத்தி வருகின்றது. இவ்வாறு கைது செயப்படுகின்றவர்களில் 90-99 சதவீதம் வரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து வருகின்றது. கைது செயப்படும் ஒவ்வொரு பலஸ்தீனரையும் இஸ்ரேல் நீதிமன்றம் தடுத்து வைக்கும் உத்தரவை வழங்குகின்றது. அவர்கள் செய்த குற்றம் எது என்று பாராது இவ்வாறு தடுத்து வைக்கப்படுகின்றார்கள்.

சிறுவர்கள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள். அரசியல்பிரமுகர்கள், வீதிகளில் செல்வோர் எனப் பலதரப்பட்டோர் நிர்வாக தடுப்பு முறையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரகசிய சாட்சியங்களை காரணியாகக் கொண்டு எவ்வித குற்றங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். இந்த செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தை மீறியே மேற்கொள்ளப்படுகின்றன.

சிறையில் வைக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கு மிக முக்கிய அடிப்படைத்தேவைகள் கூட மறுக்கப்படுகின்றன. கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கைதிகள் இஸ்ரேல் சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றார்கள். இதன் மூலம் அவர்களது குடும்பத்தவர்கள் கூட அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

1967 முதல் இஸ்ரேல் சிறைச்சாலைகளில் 200 க்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். துன்புறுத்தல் அல்லது வைத்திய சிகிச்சைகள் மறுக்கப்பட்டதன் காரணமாக இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன. ரோமச் சட்டப்படி இந்த மீறல்கள் மனிதத்துவதற்திற்கு எதிராக மேற்கொண்ட யுத்த குற்றங்களாகவே கருதப்பட வேண்டும்.

கடந்த இரு தசாப்தங்களில் மிகப் பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்று பலஸ்தீனர்களால் prisoners day imageஇப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ஆம் திகதி இடம்பெறும் பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை அடையாளப்படுத்தியே இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறை வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மர்வான் பராகுத்தீ என்ற தலைவரின் தலைமையில் ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகள் இந்த உண்ணாவிரதத்தில் இடம்பெற்றுள்ளனர்.

சிறைக்கைதிகளுக்குரிய அடிப்படைஉரிமைகள் கூட மறுக்கப்படுவதனை ஆட்சேபித்தே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா உடன்படிக்கையை மீறி பலவந்தமான கைது, இஸ்ரேல் சிறைகளுக்கு பலவந்தமாக இடமாற்றுதல், துன்புறுத்தல், மனிதாபிமானமற்ற கவனிப்பு, திட்டமிட்டு மருத்துவத் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றமை போன்றவற்றை ஆட்சேபித்தே இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப தமது சட்ட ரீதியான உரிமைகள் மறுக்கப்படுவதை ஆட்சேபித்தே சிறைக்கைதிகள் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தைப் பெறுவற்காக இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். உண்ணாவிரதம் இருக்கும் பலஸ்தீனர்களுக்காக உலகெங்கிலும் இருந்து ஒருமைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

சிறைக்கைதிகளுக்கு இருக்கும் உரிமைகளை தமக்கு பெற்றுத் தருமாறு கோரி இவர்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு, நாளுக்கு நாள் சர்வதேச மட்டத்தில் இருந்து ஆதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இவர்கள் நடத்தும் இந்தப் போரட்டத்திற்கு 8 நோபல் பரிசு வெற்றியாளர்களும் 120 நாடுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களது ஆதரவு கிடைத்து வருகின்றது.

பலஸ்தீன சிறைக்கைதிகளை விடுவிக்கக் கோரி இப்போது கையொப்பங்கள் திரட்டப்படுகின்றன. கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதுவராயலத்தில் கடந்த புதன்கிழமை கையொப்பம் திரட்டும் நிகழ்வு ஆரம்பமானது. கொழும்பிலுள்ள பலஸ்தீனத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை – பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தின் இணைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் சர்வதேச நீதிக்கான ஊடக அமைப்பின் தலைவர் ஜயதிலக்க டீ சில்வா உட்பட ஊடகவியலாளர்களும், பலஸ்தீன நியாயத்துக்காகப் போராடி வரும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதே நேரம் சிறைவைக்கப்பட்டுள்ள பலஸ்தீனத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மர்வான் பராகுத்தீ உலக நாடுகளிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமும் கௌரவத்துக்குமான தமது உண்ணாவிரதம் பற்றி கடிதங்களை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் 2012ஆம் ஆண்டு முதன்முறையாக கைது செயப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தான் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, பலஸ்தீன சட்ட பேரவையைச் சேர்ந்த 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செயப்பட்டுள்ளதோடு, அவர்களில் 13 உறுப்பினர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீனப் பாராளுமன்றத்தின் அரைவாசிக்கு மேற்பட்டோர் கைது செயப்பட்டிருப்பது உலகின் ஏனைய நாடுகளிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயும் அகௌரவமாகும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இது சுதந்திரத்திற்கும் நீதிக்கும் செயும் துரோகமுமாகும். எனவே இதற்கு குரல் கொடுக்குமாறு உலகின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். (நு)

-என்.எம். அமீன்-18199056_10155206378308290_2757535236721702927_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>