ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை பங்கேற்பு


3223603

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய கனிஷ்ட இரண்டாவது மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை பங்கேற்கவுள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ள இவ்மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 12 வீர வீராங்கனைகளைக் கொண்ட குழுவொன்று கலந்து கொள்ள உள்ளது. இப்போட்டி மேமாதம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தியகமவில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய 9 வீரர்கள் மற்றும் 3 வீராங்கனைகள் இதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>