இராணுவ கழகம் அபார வெற்றியுடன் அரையிறுதிக்குத் தகுதி


_DSC0040

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டுவரும் கழகங்களுக்கிடையிலான எப்.ஏ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் அண்மையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறாது

நீண்ட கால இடைவெளியின் பின் சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப் போட்டிகளை காண ஆயிரக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் வருகை தந்திருந்தமை அவதானிக்க முடிந்தது.

சனிக்கிழமை இடம் பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் பேறுவளை சுபர்சன் விளையாட்டு கழகத்தை 12:1 என்ற கோல்கனக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானது.

ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தின் ஆதிக்கத்தைத் தனது பக்கம் வைத்துக்கொண்ட இராணுவ அணி முதல் பாதி முடிவில் 4:0 என்ற ரீதியில் முன்னிலையிலிருந்தது. இரண்டாம் பாதியில் மீண்டும் தனது ஆட்ட பலத்தை வெளிப்படுத்திய இராணுவ கழகமானது போட்டி முடிவில் 12:1 என்ற ரீதியில் பாரிய வெற்றியைப் பெற்றது.

இராணுவ அணிசார்பாக எம்.டி. சந்ரசேகர 5 கோல்களையும், எம்.என்.எம். இஸ்ஸடீன் 3 கோல்களையும், ரிம்ஸான் 2 கோல்களையும், சஜித் குமார மற்றம் டி சில்வா ஆகியோர் ஒரு கோல் வீதமும் பெற்றனர்.

சுபர்சன் சார்பாக போடப்பட்ட கோல் கய்ஸ் எம் சப்ரான் இனால் போடப்பட்டது. இப் போட்டியின் பெறுமதிமிக்க வீரருக்கான விருது எம்.என்.எம். இஸ்ஸடீனுக்கு வழங்கப்பட்டது.

அதே தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் களுத்துறை புளுஸ்டார் கழகத்தைக் கொழும்பு சௌண்டர்ஸ் விளையாட்டு கழகம் 2:1 என்ற ரீதியில் வெற்றி பெற்று அரையிறுதியிற்குத் தெரிவானது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் கொழும்பு கால்பந்து கழகம் 1:0 என்ற ரீதியில் இலங்கை இராணுவ கழகத்தை வீழ்த்திய அதே வேளை கடந்த வருடம் இரண்டாம் இடத்தைப் பெற்ற பிரபல றினோன் கழகத்தை ஜாவாலேன் விளையாட்டு கழகம் 3:1 என்ற ரீதியில் பெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

– அஸீம் சுபைர் –

_DSC0040 _DSC8924 MVP - MNM Ishadeen (SL Army)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>