5,000 ரூபா நோட்டுகள் இரத்துச் செய்யப்படமாட்டாது – இலங்கை மத்திய வங்கி


shri-lanka3

தற்போது புழக்கத்திலுள்ள ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை எவ்விதத்திலும் இரத்துச் செய்யப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இன்று பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர், தற்போது புழக்கத்திலுள்ள ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் கையொப்பத்துடன், அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியாகின. என்றாலும் தற்போழுது எழுந்துள்ள இரட்டைக் குடியுரிமை பிரஜை சம்பவங்களை காரணம் காட்டி அர்ஜுன் மகேந்திரனின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் இரத்துச் செய்யப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை காரணமாக கீதா குமராசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி  இன்று இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பித்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>