அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகர !


dayasiri jayasekara

அமைச்சரவை இணைப் பேச்சாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகராவை நியமிக்கக் கட்சியின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

முன்னதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தபோதும், அவர் அந்தப் பதவியை நிராகரித்துள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதில ஆகியோர் கடமையாற்றி வருகின்ற நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகரா நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒரு அமைச்சரவை பேச்சாளர் நியமிக்கப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர் தயாசிறி ஜயசேகராவின் பெயர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஸ)

2 comments

  1. Mohammed Ziad

    Good better than others from SLFP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>