பிரான்ஸின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு


dfd

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக எமானுவேல் மெக்ரோன் நேற்று (14) பதவியேற்றுள்ளார்.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஒலாந்தேவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த மாதம் 23 ஆம் திகதி முதலாம் கட்ட தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

பிரான்கோயிஸ் ஒலாந்தே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்திருந்தார்.

மிக இளவயதில் பிரான்சின் ஜனாதிபதியாக மெக்ரோன் பதவியேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெக்ரோன் பதவியேற்கும் முன்னதாக முன்னாள் அதிபர் ஹோலண்டேவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>