மற்றுமொரு சைபர் தாக்குதல் ; இன்று நடத்தப்படலாம் என எச்சரிக்கை


NHS-cyber-attack-803758

இன்று உலகமெங்கும் மற்றுமொரு இணையத் தாக்குதல் நடத்தப்படலாம் என இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை உலகளவில் நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கணினி அமைப்புகள் பாதிப்படைந்த நிலையில், அடுத்து ஒரு மிகப்பெரிய இணையத் தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கணினி பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷ்யா என சுமார் 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரான்சம்வேர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் பாதிக்கப்படக்கூடியது, இது முதலில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை மூலம் அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணினி பாதுகாப்பு வல்லுநரும், ரான்சம்வேர் தாக்குதலின் வீரியத்தைக் கட்டுப்படுத்த உதவியவருமான மால்வேர் டெக் என்பவர், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணையத் தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்தத் தாக்குதல் அனேகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அம்பர் ரூத் கூறுகையில்; பாதிக்கப்பட்ட மொத்த தேசிய சுகாதார சேவைகளில் 6 ஐத் தவிர்த்து மற்றவை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கணினி வைரசுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் முதல் 600 டாலர் வரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 500 முதல் ரூ.39 ஆயிரம் வரையில்) பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில் இதுவரை 22 ஆயிரம் பவுண்டுக்கு அதிகமாக (சுமார் ரூ.18 லட்சத்துக்கு அதிகமாக) 3 கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை இப்படி ஒரு இணையத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று யூரோபோல் (ஐரோப்பிய சட்ட அமலாக்கல் ஒத்துழைப்பு முகமை) கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இணையத் தாக்குதல் காரணமாக பிரிட்டனில் சில மருத்துவமனைகள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த சிகிச்சை ஆலோசனைகள் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான நடைமுறைகளை இரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>