வடகொரியா ஏவுகணை விவகாரம்: பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட அமெரிக்கா, ஜப்பான் கோரிக்கை


un-north-korea

சர்வதேச நாடுகளின் கண்டனங்களை கண்டுகொள்ளாமல் வட கொரியா நடத்தியுள்ள புதிய ஏவுகணை பரிசோதனையைத் தொடர்ந்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டி இவ்விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று காலை வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் மீண்டும் புதிய ஏவுகணை சோதனையொன்றை வட கொரியா நடத்தியதை அடுத்தே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவின் ஏவுகணை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, “வடகொரியாவின் செயல் நியாயப்படுத்த முடியாதது. அந்த ஏவுகணையால் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் பாதிப்பு” எனக் கூறியுள்ளார்.

வட கொரியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, நாளை அல்லது நாளை மறுதினம் பாதுகாப்பு கவுன்சில் கூடி வட கொரிய விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>