தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பொதுமக்கள் கடும் அவதி


bus-strike-tvm-14-1494768826

தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, திருப்பூர், வேலூர், கரூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

bus-strike-tvm-14-1494768826
201705151200228342_pallavan-illam._L_styvpf

201705151200228342_DSC_2473._L_styvpf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>