முதலில் பேய்… அடுத்து தேனீகள் ; பதறியோடிய எம்பிகள்


fff

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு விடுதி ஒன்று நுவரெலியாவில்உள்ளது. பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஓய்வு விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட இல்லம் தான் இன்று இலங்கை எம்பிகளின் ஓய்வு விடுதியாக மாறியுள்ளது.

இந்த விடுதி அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்குவதுண்டு. ஓரிரு மாதங்களுக்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் எம்பியான நலின் பண்டார அந்த விடுதியில் தங்கி இருந்தபோது பேய்த் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து தேனீகளும் அங்குச் செல்லும் எம்பிக்களைத் தாக்கத் தொடங்கின.

அந்த விடுதியைச் சுற்றி யன்னல் கதவுகளில் பத்து, பதினைந்து தேன் கூடுகள் திடீரெனத் தோன்றின. இதனால் அங்குச் செல்லும் எம்பிக்கள் கடும் அசௌகரீகத்தை எதிர்கொள்ளத் தொடங்கினர். ஒவ்வொரு எம்பிக்களையும் அந்தத் தேனீகள் பதம்பார்க்கத் தொடங்கின.

அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத எம்பிக்கள் உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய, அந்த அதிகாரிகளின் ஏற்பட்டால் அண்மையில் தேன் கூடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது எம்பிக்கள் நிம்மதியாக அங்குச் சென்று ஓய்வு எடுக்கலாம். (ஸ)

– எம்.ஐ.முபாறக் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>