முச்சக்கர வண்டி 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து


DSC03547

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.

நானுஓயா நகரத்திலிருந்து உடரதல்ல தோட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று நேற்று இரவு 10.30 மணிக்கு நானுஓயா உடரதல்ல பிரதான வீதியில் கிளாசோ தோட்ட பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நு)

-க.கிஷாந்தன்-

DSC03547

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>