ஞானசார தேரரை கைது செய்யவும்: முஸ்லிம் அமைச்சர்கள் பொலிஸ்மா அதிபரிடம் மகஜர்


popo

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரை கைதுசெய்யாவிடின் நாட்டின் அமைதி சீர்குலைய வாய்ப்புண்டு என தெரிவித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரை  இன்று (18) மாலை நேரடியாக  சந்தித்து  இந்த மகஜரை  கையளித்துள்ளனர்.

அல்லாஹ்வை வேண்டுமென்றே கேவலப்படுத்திவரும் ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான பைசர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கூட்டாக இணைந்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று மாலை பதிவு செய்துள்ளனர்.

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ்வின் மீதும் தொடர்ச்சியாக கக்கிவரும் விஷக்கருத்துக்கள் அடங்கிய ஆவணங்களை  பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஞானசாரரின் நடவடிக்கை தொடர்பில் முஸ்லிம் மக்கள்  விசனமடைந்துள்ளதாகவும், நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்து வருவதாகவும் குறித்த முஸ்லிம் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

popo iuy

4 comments

 1. Mhm Fasil

  மகஜர் வேறு கொடுக்கவேண்டும் போல!!
  ஏன் உங்கள் பங்காளி அரச தலைவர்கள் எங்கே?
  ஆளுமையற்ற நாட்டின் அரச தலைவர்களை உருவாக்கியதை நினைத்து வெட்கப்படவேண்டும் சிறுபான்மை சமூகம்!!!

 2. Jemeel Jemeel

  Ungaluku Innum Compline Panni Alukkallaya???????

 3. David Jhones

  ஒரு ஆணியும் புடுங்க முடியாது………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>