பேருவளை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்


08cc4967-9527-4d90-8caf-d7efdb41a085

பேருவளை சீனங்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் ஜனாபா பஹீமா பாயிஸ் தலைமையில் கல்லரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேல்மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு. விமல் குனரத்ன அவர்களினால் கல்லூரியின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாகாண, மாவட்ட, வலய கல்வி அதிகாரிகள் உட்பட பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றார்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவிகள் என பெருந்திரளானோர் கலந்துசிறப்பித்தனர்.

பேருவளை அரப்வீதி மர்ஹும் அல்ஹாஜ் ஹாரிஸ் அவர்களின் ஞாபகர்த்தமாக நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியில் கற்விகற்கும் அன்னாரின் பேரக்குழந்தைகளினால் இவ்விணையத்தளம் கல்லூரிக்கு பரிசளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஆ)

http://naleemhajlc.edu.lk/

08cc4967-9527-4d90-8caf-d7efdb41a085

678e2a15-1811-4d26-bf3c-7c93943da4b6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>