கியன்துவயில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 52 பேர் காயம்


Screen Shot 05-19-17 at 10.46 AM

காலி – அக்குரஸ்ஸை பிரதான வீதியின் கியன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

அக்குரஸ்ஸையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்திசையிலிருந்து பணித்த தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பஸ்களிலும் பயணித்த 31 பெண்கள் உள்ளிட்ட 52 பேர் காயமடைந்து அக்குரஸ்ஸை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பஸ்களின் சாரதிகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் கவலைக்கிடமான நிலையிலிருந்த 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஸ)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>