Update : முஸ்லிம் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு (Video & Photos)


04

Update :02

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் மற்றும் பாராளுன்ற உறுப்பினர்கள் மட்டத்திலான உயர்மட்டக் கலந்துடையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (19) தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில், முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இவ்விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவற்றுக்கான தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

இதற்காக ஜனாதிபதியிடம் சந்திப்பொன்றை மேற்கொள்ளும்நோக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடிதம் ஒன்றை அனுப்புவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள கடும்போக்குவாத கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில், அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய காட்டமான கருத்துகளை தெரிவித்தனர். அத்துடன், இதன் பின்னணியில் செயற்படும் இனவாத சக்திகள் தொடர்பாக இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. (ஸ)

Update :01

முஸ்லிம்களுக்கெதிரான சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான விசேட கூட்டமொன்று தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளுப்பட்டு வரும் அநீதிகளை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துச் செல்லும் பொது வழிமுறை ஒன்று தொடர்பில் இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டுவருவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையிலான இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எம்.எச். எம். நவவி, எஸ்.எம். மரிக்கார், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

01 02 03 04 05

33 comments

  1. Mohamed Mohamedumer

    Muslimgalai pathuhaka udanadiyaha mudivai mudivaha mudivukku konduwaruwathu kattaya kadamaiya??????

  2. Naseem Msm

    ஏமாறும் கூட்டம் இருக்கும் வரைக்கும் ஏமாற்றும் கூட்டமும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

  3. Nazeem Muhammad

    சந்தித்து என்ன பிரயோசனம் அவர்கள் அவர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகளை தான் கதைப்பார்கள்

  4. Jbb Rizwan

    MASHA ALLAH MASHA ALLAH MASHA ALLAH super super super

  5. நம்பேன் டா நண்பா

    இவ்வலவு பேரா ? ஏனையவர்கள் எங்கே ?

  6. Mohamed Hanafy

    Only discussion again & again. But NO ACTION yet..

  7. Aishu DE Mural

    oru mayirum pudunga matanuhall

    all from Allah

  8. Aishu DE Mural

    oru mayirum pudunga matanuhall

    all from Allah

  9. Daoud Tharik

    உங்கள் பதவிகளை பாதுகாத்து கொள்ளுங்கள். உங்கள் ஒன்றும் புடுங்க முடியாது.

  10. Daoud Tharik

    உங்கள் பதவிகளை பாதுகாத்து கொள்ளுங்கள். உங்கள் ஒன்றும் புடுங்க முடியாது.

  11. Sharfaz Sls

    Mano ganeshanda speach eppadi ithuthan thalaivan

  12. Sharfaz Sls

    Mano ganeshanda speach eppadi ithuthan thalaivan

  13. Mohammed Infas

    Abesaranay….
    Inge wandu irukkurewen waraathewen ellaarukkum…

  14. Kenthiran Kathirgamanathan

    waste of time….they just meet to discuss their commission

  15. Mohamed Zubair

    All of them must resign from their minister posts and should be in the opposition like TNA. TNA is doing much more to their society from opposition.

  16. Mohmeed Mansoor

    சந்தித்து என்ன பிரயோசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>