சியன ஊடக வட்ட ஏற்பாட்டில் கஹட்டோவிட்டவில் ஊடக கருத்தரங்கு


Media-Workshop-logo-1

சியன ஊடக வட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து நடாத்தும் ‘மாற்றத்தை நோக்கிய ஊடகப்பயணம்’ என்ற தொனிப்பொருளிலான ஊடகக் கருத்தரங்கு நாளை 20ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட அல் – பத்ரியா மகா வித்தியாலத்தில் நடைபெறவுள்ளது.

காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் கருத்தரங்கு, பிற்பகல் 3.30க்கு நிறைவுபெறவுள்ளது. மீண்டும் பிற்பகல் 4.00 மணி முதல் பகிரங்க அமர்வு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வமர்வில் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான உலக கலாசார நிலையத்தின் பணிப்பாளர் மௌலவி எஸ்.எல்.நௌபரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சியன ஊடக வட்டம் தனது முதலாவது நிகழ்வாக ஏற்பாடு செய்துள்ள இவ்வூடக கருத்தரங்கில், அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் பிரபல ஊடகவியலாளர்கள் பலர் விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

இவ்வூடக கருத்தரங்கின் போது க.பொ.த. சாதார தரப் பரீட்சையில் 9 ஏ புள்ளியினைப் பெற்ற கஹட்டோவிட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு, பண உதவிகளும் வழங்கப்படவுள்ளதாக ஊடக வட்டத் தலைவரும், வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.

இவ்வூடக கருத்தரங்கில் கஹட்டோவிட்ட அல் – பத்ரியா, கஹட்டோவிட்ட பாலிகா, உடுகொட அரபா, திஹாரிய அல் – அஸ்ஹர், கள்- எளிய அலிகார், அல்லரமுல்ல சாஹிரா, நாம்புளுவ பாபுஸ்ஸலாம், குமாரிமுல்லை முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் உயர்தர மாணவ, மாணவிகளும், பிரதேச அரபுக் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். (நு)

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>