கஹட்டோவிட்ட சியனே ஊடக வட்டத்தின் ஒரு நாள் செயலமர்வு (Photos)


011

கஹட்டோவிட்ட சியனே ஊடக வட்டம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து நேற்று (20) ஒரு நாள் ஊடக செயலமர்வொன்றை கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடாத்தியது.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், சியனே ஊடக அமைப்பின் தலைவரும் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை பணிப்பாளருமான எம்.இஸட். அஹமட் முனவ்வர், நொலேஜ் பொக்ஸ் ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மத்திய குழு உறுப்பினருமான அஷ்கர் கான், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஹில்மி முஹம்மட், ஸ்ரீ ல.மு.மீடியா போரத்தின் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சாதிக் ஷிஹான், நவமணி நாளிதழின் ஆசிரியர் பீட ஊடகவியலாளர் கலைவாதி கலீல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், கஹட்டோவிட்ட, உடுகொட, திஹாரிய, நாம்புளுவை, குமாரிமுல்லை, கள்-எளிய ஆகிய பிரதேசங்களின் பாடசாலை அதிபர்கள், பள்ளிவாயல்களின் நிருவாகிககள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், புத்திஜீவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்த ஒருநாள் செயலமர்வில் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த 233 மாணவ, மாணவியர்கள் கலந்து பயன்பெற்றனர். (மு)

IMG_1675(1)  IMG_1688137209

IMG_1709 IMG_1736 IMG_1745 IMG_1763 IMG_1770052

038  074 129 131 141 144 151 205

 

IMG_1580

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>