திடீர் அனர்த்தம் நாட்டிலுள்ள இனவாதிகளுக்கு ஒரு பாடம்- வே. இராதாகிருஷ்ணன்


uyt

நாட்டில் இனவாதம் பேசி மூவின மக்களிடையே முறுகல் நிலையை தோற்றுவிக்க முயன்ற இனவாதிகளுக்கு, இந்த காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தம் ஒரு படிப்பினையாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் காணாமல் போயுமுள்ளனர்.  பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  ஆனால், யாரும் இனவாதத்துடன் செயற்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் இனவாதம் பேசி நாட்டை மீண்டும் இரத்தத்தில் மூழ்கடிக்க நினைக்கும் இனவாதிகள் சிந்திக்க வேண்டும்.

இனவாதத்தினால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாத நிலையில், மீண்டும் ஒரு இனத்துவத்தை ஏற்படுத்தி நாட்டை பாதாள உலகாக மாற்ற வேண்டாம் இக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது என கண்டி சிடிமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர்  இவ்வாறு கூறியுள்ளார்.  (மு)

3 comments

  1. Azaam Gaffoor

    இந்த துவேசி வாதிகள் பாடம் கற்றுக் கொள்ள வேறு பாடம் எடுக்க வேண்டியது தமிழ் பேசும் மக்களுக்கு இன்னும் கொஞ்ச நாளில் கடமையாகும் ,என்பதில் கடுவலகும் சந்தேகம் வேண்டாம் ,எல்லோரும் தயாராகவே இருக்கவேண்டும் ,

  2. Princes Rikaza

    Enna anartham wandhalum indha inawadhigal safe. Marupadi marandhadhum wilayatu aarambamagum. Idhugalellam thirundhadha jenmangal.

  3. Alithamby Nakeel

    Those racists think that they can do anything in the country which they think only for them. They must understand they can do nothing but there is a power over their God too. There are many things they have to learn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>