பொலிஸாரின் கண்ணில் படாது ஞானசார தேரர் எவ்வாறு மறைந்துள்ளார்- ராஜித விளக்கம்


image_f39227c97a

இந்த சிறிய நாட்டில் ஞானசார தேரர் பொலிஸாரின் கண்களில் தென்படாமல் மறைந்திருப்பதாயின் அதுவும் ஒரு திறமை எனவும், இவ்வாறு மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (07) கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் தனக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே தூக்கிப் பிடிக்கின்றது எனவும், தான் முன்வைக்கும் எந்தவொரு குற்றச்சாட்டையும் விசாரணை செய்வதில்லையெனவும் கூறுகின்றார். இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றது போன்ற வசனங்களை, ஞானசார தேரர் குற்றம்சாட்டும் நபர்கள் சிங்களவர்களுக்கு எதிராக எந்தவொரு மோசமான வார்த்தையையும் கூறியதில்லை. ஞானசார தேரர் குற்றச்சாட்டும் எவரும் கடைகளுக்குத் தீ வைத்ததாகவோ, சமயத் தலங்களுக்கு தாக்குதல் நடாத்தியதாகவோ ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லை.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது தேவைகளை, கோரிக்கைகளை முன்வைக்க உரிமை இருக்கின்றது. அவர் ஞானசார தேரரைப் போன்று செயற்படவில்லை.

இது இவ்வாறிருக்கையில், ஞானசார தேரர் கூறும் நபர்களை கைது செய்வதற்கோ விசாரணை நடாத்துவதற்கோ எந்தவிதத் தேவையும் இல்லையெனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.  (மு)

image_f39227c97a

9 comments

 1. Zahir Ahmed

  He in jayapoor – Pakistan. .next bin Laden house
  .

 2. Rakeeb Faris

  மைத்திரி பல சிரிசேநாய்
  Plus
  பொது பல சேநாய்

  கடைசியில் இரண்டுமே நாய்தான்

  மைத்திரி பலுசேநாய் Group of Company.

 3. Rakeeb Faris

  மைத்திரி பல சிரிசேநாய்
  Plus
  பொது பல சேநாய்

  கடைசியில் இரண்டுமே நாய்தான்

  மைத்திரி பலுசேநாய் Group of Company.

 4. Pradeepan Pradeep

  Neengale olichchi vachchittu yengakitta ketta yepdi terium??????????

 5. Mahthi Mahthi

  நம்மை போன்று உள்ள சிறிய சிறிய நாடுகள் எல்லாம் நம்மைக்காட்டிலும் முன்நேறி சென்று விட்டது இலங்கையில் மட்டும் ஏன்டா இன்னமும் யுத்தம் இனக்கலவரம் மதக்கலவரம் என்று சொல்லி நாட்டையே வளரவிடாம தடுக்குறிங்க பெறுன்பான்மையினர்னு சும்மா வாயல சொன்னா மாதிரம் போதுமா? ஒரு அளிறப்பர்கூட நமது நாட்டுக்கு சொந்தமில்லை எத எடுத்தாலும் madin japan madin china m
  adin india நீங்க என்ன செஞ்சிருச்சிங்க இன வாதத்தையும் மத வாதத்தையும் எவன் தூன்டுகின்ற சக்தியை துடைத்து எறியுங்கள் அதன் பின்னர்தான் நாடு சுபீட்சமடையும் வெக்கமா இல்லையா? இவ்வளவு இயற்கை வழங்கல வெச்சிட்டு வெளிநாடுகளில் பிச்சை எடுத்துக்கொன்டிருக்க?

 6. Sasikumar Kumar

  திறமையுமில்ல ஒரு புண்ணாக்குமில்ல எல்லாமே அரசாங்கத்தின் அரங்கேற்றமே ஆடும் ஆட்டத்திற்கு ஒரு நாள் அடங்கியே ஆக வேண்டும் இதெல்லாம் அவர்களின் அழிவுக்கு ஆரம்பம்

 7. Mohamed Siyardjeje

  பொலிஸாரின் கண்ணில் படாது ஞானசார தேரர் எவ்வாறு மறைந்துள்ளார்?……….நாட்டில் இருக்கும் பாதுகாப்பு படஎல்லாம் என்ன புடுங்கறாங்க,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>