கஹட்டோவிட்ட இமாம் ஷாபிஈ நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிகழ்வு


imaam shafi center 1346

கஹட்டோவிட்டாவில் இயங்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிறுவனத்தின் உயர் கல்வி மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்குதல், வறியவர்களுக்கான உலர் உணவுப் பொதி விநியோகம் மற்றும் அனாதைச் சிறுவர்களுக்கான நிதி உதவி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இன்று (08) நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.

 கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.ஏ. முஜீப் கபுரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் அஷ்ஷெய்க் எம்.எம். முஹம்மத் சிறப்புப் பேச்சாளராகவும், மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் விசேட அதிதியாகவும், ருகுணு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்மிக ஜயசிங்க சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், உயர் கல்வியில் படிக்கும் 50 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் புலமைப் பரிசில் உதவியும், 17 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 45 ஆயிரம் ரூபா வீதம் நிதி உதவியும், 110 உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் கிராமத்தின் பள்ளிவாயல்களின் தலைவர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.   (மு)
imaam shafi center 1335
imaam shafi center 1295
imaam shafi center 1365
imaam shafi center 1353
imaam shafi center 1330
imaam shafi center 1388
imaam shafi center 1405
imaam shafi center 1176 imaam shafi center 1212 imaam shafi center 1173
imaam shafi center 1156
imaam shafi center 1341
imaam shafi center 1346

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>