கவிக்கோவுக்கான முதல் நினைவரங்கு இலங்கையில்… (Photos)


8062017news card22222 ev copy

வலம்புரி கவிதா வட்டத்தின் 38 வது கவியரங்கு நேற்று காலை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவரங்காக வகவத் தலைவர் என். நஜ்முல்ஹுசைன் தலைமையில் நடைபெற்றது. கவிக்கோவுக்காக நடைபெறும் முதலாவது நினைவரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற இந் நினைவரங்கில் கவிக்கோவை முற்படுத்தி உரைகளும் கவிதைகளும் இடம்பெற்றன. வகவ ஸ்தாபகத் தலைவர் டாக்டர் தாசிம் அகமது, லேக்ஹவுஸ் தமிழ் பத்திரிகைகளின் ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம், சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த மணவை அசோகன், தமிழ்த் தென்றல் அலி அக்பர், கவிஞர் எம். பிரேம்ராஜ், கலாபூஷணம் எம். பி.எம். நிஸ்வான், ஓய்வு நிலை கல்வி அதிகாரி ஏ. பீர்முகமது, மிஹிந்தலை பாரிஸ், சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி, சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், சிரேஷ்ட வானொலி கலைஞர் எம். எஸ்.எம். ஜின்னா, கவிநேசன் நவாஸ், வகவ செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஈழகணேஷ், வகவ தேசிய அமைப்பாளர் கவிஞர் மேமன்கவி ஆகியோர் கலந்து உரைகளாலும் கவிதைகளாலும் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு புகழாரம் சூட்டினர்.

கவிஞர் கலா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் தாஜ்மஹான், எம். வசீர், சுபாஷினி பிரணவன், வெலிமடை ஜஹாங்கீர், உடுகொட அய்யாஷ் சுபைர், செ.ஜெ.பபியான், மஸீதா அன்சார், பாயிஸா ஹமீத், ச. தனபாலன், நஸீமா முஹம்மத், தேஜஸ்வினி பிரணவன் ஆகியோர் கவிதை பாடினர்.

ரவூப் ஹஸீர், கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், ஏ.எஸ். எம். நவாஸ், எம். எஸ். எம். ராஸிக், க.லோகநாதன், எஸ். எச். எம். சுபைர், ஜொயெல் ஜோன்சன், முல்லை முஸ்ரிபா, ரி.என். இஸ்ரா, ஐ.எம். இஹ்லாஸ், எஸ். ஏ.கரீம், சிவாபிரதீபன்என பலர் சபையை அலங்கரித்தனர். (ஸ)

8062017news card ev copy 8062017news card22222 ev copy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>