Caring Hands, Knowledge Box மற்றும் டெய்லி சிலோன் நிவாரண யாத்திரை (Video)


KBDCCH

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் Caring Hands, Knowledge Box மற்றும் டெய்லி சிலோன் இணைந்து நிவாரணம் பணிகளை முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 27ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தில் 4800 குடும்பங்களுக்கு குடிநீர் போத்தல்கள் விநியோகிக்கப்பட்டது. மாத்தறை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பள்ளிவாசல்கள் ஊடாக இந்த குடிநீர் போத்தல்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்துடன் 29ஆம் திகதி எல்பிட்டிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்கு குடிநீர் போத்தல்கள் விநியோகிக்கப்பட்டது.

மேலும் Bed sheet, Towel, சவர்க்காரம், பற்பசை, பற்தூரிகை, வாலி, பிஸ்கட், நுளம்பு வலை, பாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சுமார் 3500 ரூபாய் பெறுமதியான 500 பொதிகள் கடந்த 31ஆம் திகதி அக்குரஸ்ஸ முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது. குறித்த நிவாரணப் பொருட்கள் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு இன, மத பேதமின்றி பகிர்தளிக்கப்பட்டது.

மதுகமை, அகலவத்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 1800 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான குடிநீர் போத்தல்கள் கடந்த ஜூன் முதலாம் திகதி மதுகமை பிரதேச செயலகரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிவாரணப் பொருட்கள் எமது வலையமைப்பின் ஊடக சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அவர்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்தல், தொழில் துறைகளை கட்டியெழுப்புதல் போன்ற நிரந்தர ஏற்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்தும் Caring Hands, Knowledge Box மற்றும் டெய்லி சிலோன் தனது அவதானத்தை செலுத்தியுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள், கால விஜயங்கள் தற்போழுது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>