பொதுபல சேனாவின் இனவாத நடவடிக்கை: ஒரு மாற்றுப் பார்வை


BBS_Nanasara (1)

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் நாட்டில் இனவாதத்தை தூண்டி விடுவதன் நோக்கம், 2020 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வேட்பாளராக சம்பிக்க ரணவக்க அமைச்சரை கொண்டு வருவதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதைத் தடுப்பதுமேயாகும் என தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பு அறிவித்துள்ளது.

நாட்டில் “ஹலால்” என்ற பெயரில் பொய்யான ஒரு பயத்தை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டிவிட முயற்சித்த சம்பிக்க அமைச்சரும், அத்துரலிய தேரரும், ஞானசார தேரரும் இன்று ஹலால் குறித்து ஒரு வசனமாவது பேசாமல் மௌனம் சாதிப்பது, நாட்டில் ஹலால் என்ற பெயர் முற்றாக நீக்கப்பட்டுள்ளதனாலா?

கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைய பல்வேறு காரணிகள் காணப்பட்டன. அதில் ஒன்றுதான் பொதுபல சேனா அமைப்பு இனவாதத்தை தூண்டியமை. இதனால், அந்த தேர்தலில், வடக்கு, கிழக்கைத் தவிரவுள்ள ஏனைய சகல மாகாணங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ முன்னணியில் காணப்பட்டார். வடக்கை விட்டு விட்டு கிழக்கை நோக்கினால், அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். இந்த முஸ்லிம் வாக்குகள் அன்று அன்னத்துக்கு வழங்கப்பட இருக்கவில்லை. எல்.ரி.ரி.ஈ. அமைப்பை இல்லாமல் செய்த மஹிந்த ராஜபக்ஷவுக்கே வழங்கப்பட இருந்தது.

இருப்பினும், நாட்டில் பொதுபல சேனா அமைப்பு இனவாதத்தை தூண்டியதனால் முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதை விட்டும் தவிர்ந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு இனவாத பாதிப்பு வரும் என பொது வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர்.

கலகொட அத்தே ஞானசார தேரர் ஹெல உறுமய கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர். ஞானசார தேரர் நோர்வே நாட்டுக்கு சென்றார். ஏன் நோர்வே சென்றார்? இந்த இரகசியம் கடந்த அரசாங்கத்துக்கு விளங்கவில்லை.  மஹரகமயில் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைக்கு தீ வைத்தமை தொடர்பில் பொதுபல சேனாவின் முக்கியமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது அமைப்பைச் சார்ந்தவர் அல்ல என பொதுபல சேனா தற்பொழுது கூறுகின்றது. இவற்றை யாரிடம் சொல்வது!

தற்பொழுது ஞானசார தேரரைக் கைது செய்ய வேண்டாம் என்று “போஸ்டர்” பிரச்சாரமொன்று நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. நான் சொல்கின்றேன். இந்த போஸ்டர் அடிப்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று.

இந்த நடவடிக்கையினூடாக நாட்டில் பதற்ற நிலைமையை ஏற்படுத்தி, அவசர கால சட்டத்தை பிரகடனம் செய்து, அதனுாடாக தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இருக்க முடியும். இவர்களது மற்றுமொரு பிரதான நோக்கம்தான், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடாமல் தடுப்பதாகும்.

மருதானை சமூக கேந்திர நிலையத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின்   ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன  இதனைக் கூறியுள்ளார்.  (மு)
நன்றி – திவயின

தமிழில் – முஹிடீன் இஸ்லாஹி

One comment

 1. Rakeeb Faris

  இந்த மைத்திரி பலுசேநாய் ஒரு நம்பிக்கை துரோகி இவன் நாட்டின் முன்னால் ஜனாதிபதி அவர்களுக்கே நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டு
  பின்கதவால் ஓடி வந்தவன். எனவே இவன் நம்பிக்கை துரோகி என்று தெரிந்தும் நாம் நம்பி வாக்களித்தது நமது முட்டாள்தணம் மஹிந்தவிற்கு செய்த அதே துரோகத்தை முஸ்லிம்களுக்கும் செய்ரான்.
  இணம் இணத்தையே சாரும்.

  மைத்திரி பல சிரிசேநாய்
  Plus
  பொது பல சேநாய்

  கடைசியில் இரண்டுமே நாய்தான்

  மைத்திரி பலுசேநாய் Group of Company.
  நாயைகொண்டு நடுவீட்டில் வைத்தாலும் ………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>