உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி


vlcsnap-2017-06-15-11h30m01s74

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை சந்தியில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த 20 பேர் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை லெமிலியர் தோட்டத்திலிருந்து மட்டுக்கலை டி.ஆர்.ஐ தோட்ட தேயிலை மலைக்கு வேலைக்காக ஏற்றிச் சென்ற தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாளகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (நு)

-க.கிஷாந்தன்-
vlcsnap-2017-06-15-11h30m01s74vlcsnap-2017-06-15-11h30m42s224

vlcsnap-2017-06-15-11h30m13s198

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>