ஐ.சி.சி. கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்


download (1)

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத்துக்கான இன்றைய அரையிறுதிப் போட்டியில்  பங்களாதேஷ் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியில் மோதும் அணிகளாக இந்திய – பாகிஸ்தான் தெரிவாகியுள்ளன.

இன்றைய போட்டியில் நாணயச் சூழற்சியில் இந்தியா வெற்றி பெற்று களத்தடுப்பைத் தெரிவு செய்தது. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 40.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 123 ஓட்டங்களைப் பெற்ற ரோஹித் சர்மா போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.    (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>