ISIS தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டார் – ரஷ்யா


baghdadi_8d4416a6-f823-11e5-9a43-23ebef71ce06

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கடந்த மே மாதம் 28 ஆம் திகதி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யா வான்படையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்திலேயே அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிரியாவின் ரக்கா நகரில் இடம்பெற்ற ஐ.எஸ். தீவிரவாதிகளின் படை பொதுக் கூட்டத்தின் மீதே இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் ஏற்கனவே கொல்லப்பட்டதாக சில செய்திகள் வௌியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி சில சமயங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில், பெரும்பாலும் ஈராக்கின் மொசூல் நகரில் தலைமறைவாகி இருக்கலாம் என நம்பப்பட்டது.

அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினரின் தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியளவில் இந்த தகவல் வௌியாகிருந்தது. (ஆ)

10 comments

  1. Agaffar Gaffar

    ஏன்டா லுசுப் பயலுகளா ஒருத்தன் எத்தன தடவடா சாவுரது

  2. Mohamed Jawzan

    இப்படி தான் பல வருடங்களாக கொண்றதாக சொல்லி சொல்லி நம்மை கொண்று கொண்டு இருக்கிறானுகள்

  3. Rakeeb Faris

    இதோட எத்தினையாவது முறை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>