பௌத்தர்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை – அஜித்


1225711579ajithP5

நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் காணப்படும் பௌத்த மதத்துக்குரிய அதே இடம், புதிய அரசியலமைப்பிலும் அவ்வாறே காணப்படும் எனவும், பௌத்தர்கள் தேவையற்ற சந்தேகங்களை வரவழைத்துக் கொள்ளத் தேவையில்லையென பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வில்லையாயின், புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவரத் தேவையில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரிவினைவாத அரசியலமைப் பொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் வந்ததன் பின்னர், நாட்டு மக்களுக்கு எந்தவொரு நலவையும் செய்யவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.   (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>