இக்வான்களை இழந்தமைக்காக சவுதி ஒருநாளில் கைசேதப்படும் !


New Picture

நயவஞ்சகனின் நடத்தைகளால் உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. நண்பர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.   நண்பனின் இடத்தை நயவஞ்சகன் பிடித்துக் கொண்டதால் செல்வந்தர்கள் பிச்சைக்காரர்களாகியுள்ளனர். நாட்டுத் தலைவர்கள் பதவி கவிழ்ந்துள்ளனர்.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கருத்தின் பின்னணியிலேயே சஊதி, எகிப்து, துபாய் ஆகிய நாடுகளின் ஒன்றிணைவின் மூலம் நடக்கப்போவது என்ன என்பதை நோக்குவது பொருத்தமாகும்.
சஊதி அரேபியாவின்  முக்கியத்துவம், ஆன்மீக அந்தஸ்த்து காரணமாக உண்மையான நண்பர்கள் அதனுடன் சேர்ந்துகொண்டால் முழு உலகையுமே அதனால் வெற்றி கொள்ள முடியும்.

ஆனால், சஊதியின் தூரதிருஷ்டி இல்லாத நட்பால் அது அடையப் போவது கைசேதத்தையே ஆகும். சஊதியின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் கூட்டிணைந்து யமனில் தொடுத்துள்ள யுத்தத்தினால் சஊதிக்கு முழுத்துர்பாக்கியமும் துபாய்க்கு முழுப்பாக்கியமும் கிடைக்கும் நிலையில், யுத்தம் ஒப்பந்தங்கள் மூலம் முடிவுரும் தருவாயை அடைந்துள்ளது.

ஸாலிஹ் என்ற பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதியின் புரட்சியையும் ஹூஷிகள் என்ற சீயா புரட்சியாளர்களையும் அடக்குவதற்காகவே சஊதி படைதிரட்டியது. ஆனால், ஸாலிஹ் அவனது மகன் அஹ்மத் இருவரும் துபாயின் நண்பர்கள். ஹூஷிகளுக்கு சார்பான ஈரான் சீயாக்களும் துபாயில் பாதுகாப்பாக செயல்படுகின்றனர்.

இப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின்படி ‘யெமன்’ வட யெமன், தென் யெமன் என இரண்டாகப் பிரிக்கப்படும். வடக்கில் இருந்து சுதந்திரமடையும் பொருளாதார அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தென் யெமன் டுபாயின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். வடயெமன் ஹூஷிகள், இஸ்லாமிய வாதிகள் ஸாலிஹின் ஆதரவாளர்கள் என்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட மூன்று பிரிவினருடன் சஊதியின் கண்கானிப்பின் கீழ் இருக்கும்.

யெமனின் 70 வீத பொருளாதார வளம் தென்பகுதியிலேயே உள்ளது. யுத்தம் முடிந்ததன் பின் துபாய் வருமானம் பெற்றுக் கொண்டே இருக்கும். சஊதி உள்ளநாட்டு யுத்தத்தை அடக்குவதற்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் செலவுசெய்து கொண்டே இருக்கும்.

அத்துடன், டுபாயின் பேராசை நின்று விடாது. அடுத்துள்ள ஓமானிலும் புரட்சியை ஏற்படுத்தி அங்கு தனது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியுமாயின் பிராந்தியத்திலேயே மிகப்பலம் வாய்ந்த நாடாக துபாய் மாறும். எனவே, துபாயின் அடுத்த இலக்கு ஓமானாக இருக்கலாம்.

சஊதியை அண்டை நாடுகளுடன் யுத்தத்தில் ஈடுபட வைத்துவிட்டு டுபாய் ஒதுங்கிக் கொள்வதன் மூலம் அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. சில வேளை சஊதியின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடையுமாயின் சஊதியின் நிலத்தையும் பேரம்பேசுவதற்கும் டுபாய் தயங்காது.

நிச்சயமாக ஒருநாள் வரும். அப்போது, அறிவுள்ள இக்வான்களையும் வீரமுள்ள ஹமாஸையும் அருமைக் குழந்தைகளாக நினைத்து செயற்பட்டிருந்தால் முழு உலகையும் தன்னால் ஆண்டிருக்கலாமே என  சஊதி கைசேதப்படும். நிச்சயமாக சூழ்ச்சிக் காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரனாக அல்லாஹ் இருக்கின்றான்.  (மு)

– அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி)

One comment

  1. Hazzary Haridu

    Saudi never take the side of Muslims see the history. Not Saudi people saudi kings are the worst people and real hurdle to Muslims unity. Sunni shia divide also results of saudi monarch who want to safe guard their monarch at any cost . Ulamas in saudi pay roll tells we believe. Very unfortunate .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>