பாகிஸ்தானுக்கு இலங்கையிலிருந்து வாழ்த்து


19264692_1641224059230017_2018309010115173770_o

இந்தியா அணியை தோல்வியடையச் செய்து முதல் முறையாக ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை மற்றும் இலங்கை ரசிகர்களின் வாழ்த்துக்கள் பாகிஸ்தான் அணிக்கு உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைத் தலைவர், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக சபைத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முன்கூட்டியே எதிர்வுகூறல்களை கூறமுடியாத ஒரு விளையாட்டாக கிரிக்கெட் விளையாட்டு உள்ளது நிரூபணமாகியுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடர்பில் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடியதாகவும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது. (ஸ)

 

Screen Shot 2017-06-19 at 11.43.53 AM

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>