விழுந்து விழுந்து சிரிக்கும் ஒராங்குட்டான் (Video)


2F333FC700000578-0-image-a-3_1449657030210

அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பார்வையாளர் காட்டிய வித்தையைப் பார்த்து விழுந்து புரண்டு சிரித்த ஒராங்குட்டான் குரங்கின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒராங்குட்டான் குரங்கு ஒன்றின் முன் இளைஞர் ஒருவர் பிளாஷ்டிக் கப் ஒன்றில் ஒரு கஷ்கொட்டையினை (chestnut) போட்டு அதனை குரங்கைப் பார்க்க வைக்கிறார்.குரங்கும் அதைக் கண்கொட்டாமல் பார்க்கிறது.

பின்னர் அப்படியும் இப்படியும் கப்பைக் குலுக்கி அதனைக் காலுக்கு அடியில் மறைத்து விட்டு காலியான கப்பைக் குரங்கிடம் காட்டுகிறார். இதைப் பார்த்த குரங்கு விழுந்து விழுந்து சிரிக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவேற்றப்பட்ட குறித்த காணொளியை 20,213,755 பேருக்கும் மேல் இதுவரை பார்வையிற்றுள்ளனர். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>