இலங்கை வந்த சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி விசேட விருது


02

முன்னணி சர்வதேச தொழில்முனைவோர்களில் ஒருவரான சவூதி இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட விருதொன்றை வழங்கியுள்ளார்.

அவசர விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்த இளவரசர் தலால் பின் அப்துல் அஸீஸ் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தமது திருப்தியை வெளிப்படுத்திய இளவரசர் இலங்கையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையில் முதலீடு மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் உயர்ந்தளவு முதலீட்டை மேற்கொள்ளும் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை எதிர்காலத்தில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த சவுதி இளவரசர் அந்த முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக வர்த்த சமூகத்தவர்களுடன் தமது நாட்டுக்கு வருகை தருமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் மனங்கவரும் காலநிலை, பசுமை சுற்றாடல், வனப்பான கடற்கரைகள், வரலாற்று தளங்கள் போன்றவை சுற்றுலாத்துறையின் ஈர்ப்பை வென்றுள்ளதுடன், இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியா தொன்றுதொட்டே இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உதவியையும் பாராட்டினார்.

அத்துடன் சவுதி அரேபியாவில் பணியாற்றும் சுமார் நான்கு இலட்சம் இலங்கையர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு நல்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களும் சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (நு) 02

01

03

04

11 comments

 1. Mohamed Nawshad

  ko nanasara hamaduruwan MENNOO HAMBAYO RATA ALLANA HADANAWOO

 2. Rakeeb Faris

  மைத்திரி பல சிரிசேநாய்
  Plus
  பொது பல சேநாய்

  கடைசியில் இரண்டுமே நாய்தான்
  மைத்திரி பலுசேநாய் Group of Company

  நாயை கொண்டு நடுவீட்டில் வைத்தாலும்…

 3. Hassan Hameed

  Is he our president…? 😂😂😂

 4. Mohamed Farook

  உன்னை நம்புவது கஸ்ட்டம் ஆப்பு வச்சாலும் வச்சிருவாய்.

 5. Malaiagath Thamizhan

  சௌதி அரேபியாவில் பணியாற்றி இலங்கையின் பொருளாதாரத்துக் கடனுக்கு (வட்டி கட்ட) உதவும் 4 லட்சம் இலங்கையரை நினைவு கூர்ந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் மலையகத்தின் மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஏதாவது செய்யும் எண்ணம் உண்டா எனக் கேட்கத் தோன்றுகிறது. இருந்தால் மகிழ்வோம், இல்லாவிட்டால் (எப்போதும் போல) IT’S OKAY. KEEP MOVING என்று சொல்லி எமது ஒத்துழைப்பைத் தொடருவோம்.

 6. Saleem Ahamad Saleem

  ஒரு வேளை இளவரசர் சாப்பாடு இல்லாமல் இலங்கைக்கு தஞ்சம் புகுந்த மாதிரியும் புதிதாக பல விருதுகளை வழங்கி வலி அனுப்பி வைத்தார்களாமா ஏன் என்றால் இளவரசர் பசி பட்டினி கிடந்து ததவித்த இருப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>