தேசிய நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகளை உள்ளடக்கிய குழு இந்தோனேசிய விஜயம்


IMG_1125

இலங்கை – இந்தோனேசியா நாடுகளுக்கிடையே சமூக நீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார வசதிகள் முதலான துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தின், நீர் வழங்கல் கருத்திட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை இந்தோனேசிய தலைநகர் ஜஹர்த்தா நோக்கி புறப்படவுள்ளனர்.

உலக வங்கியின் அனுசரணையில் நடாத்தப்படும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு விமானப் பயணச்சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இதின்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான ஆகியோரும் கலந்துகொண்டனர். (ஸ)

IMG_1109 IMG_1113 IMG_1123 IMG_1125 IMG_1136

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>