இலங்கையின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை வெற்றி


Surgeons performing heart transplant surgery in a hospital operating theatre. The surgeon has opened the patients chest with protractors and is using a pair of forceps. This image may only be used to portray the subject in a positive manner.
© shoutpictures.com
john@shoutpictures.com

நாட்டில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்திருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 7ம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுராதபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மூளை செயலிழந்த 24 வயதுடைய இளைஞனின் இருதயம் இவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களும் இரண்டு நோயாளர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மனித உறுப்புக்கள் பொருத்தப்பட்ட மூவரும் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சத்திர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி பேராதனை, அனுராதபுரம், வெலிசறை, பொரளை ஆகிய வைத்தியசாலைகளின் விசேட நிபுணர்கள் இந்த இருதய சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். (ஸ)

4 comments

  1. Maji Aimal

    Iruppathu oru ithayam athai koduppathu yaar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>